யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களுடன் பேசிய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான P2P போராட்டத்தை நாங்களே முன்னெடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில், “நாங்கள் கடந்த காலங்களில் காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைக் சட்ட எதிர்ப்பு, இராணுவ முகாம்கள் அகற்றல் உள்ளிட்ட பல போராட்டங்களில் முன்னிலை வகித்தோம். P2P போராட்டம் பொலிகண்டி வரை சென்றதே எங்களால் தான். ஹர்த்தால் போராட்டம் ஒரு ஆரம்பம் மட்டுமே; தொடர்ந்தும் போராடுவோம்” என்றார்.
Post Views: 397