பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க ஹமாஸ் அமைப்புக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இவ்விவகாரத்தில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “48 மணி நேரத்திற்குள் உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்,” என எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஹமாஸ், “காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பது கடினமான பணியாகும்; இதற்கு சிறப்பு உபகரணங்களும் அதிக முயற்சியும் தேவை,” என்று தெரிவித்துள்ளது.
Post Views: 165