தன்னுடைய 3 குழந்தைகளை கத்தியால் குத்திய சந்தேகத்தின் அடிப்படையில் 47 வயதான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், Baulkham Hills பகுதியில் இன்று அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய வீட்டில் தன்னுடைய மனைவியும் 3 குழந்தைகளும் கத்தி குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என குறித்த குழந்தைகளின் தந்தை போலீசாருக்கு அறிவித்துள்ளார். தந்தை வழங்கிய குறைபாட்டினை அடுத்து விரைந்து சென்ற போலீசார் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகிய 4 பேரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான 10 வயது சிறுவன், 13 மற்றும் 16 வயதான சிறுமி உட்பட 47 வயதான தாயுமே சிகைச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நடக்கும்போது தந்தை தூக்கத்தில் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதில் தாயின் வயிற்றில் கத்தி குத்தப்பட்டிருக்கும் விதம், தன்னைத்தானே கத்தியால் குத்தியது போல தென்பட்டமையினால் பொலிஸாருக்கு தாயின் மீது சந்தேகம் எழுந்துள்ளது .
குறித்த தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்தி பின் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என தோன்றியுள்ளது.
குறித்த தாய் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது, இருந்த போதும் குறித்த தாய்க்கு மனதளவில் எந்த பாதிப்பும் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்