Thayagam Tamil Radio Australia

“விடுதலைப் புலிகள் காலத்தை விட மோசமான நிலை” – சாகர காரியவசம் கடும் விமர்சனம்

July 8, 2025

Spread the love

நாட்டின் தற்போதைய நிலை, விடுதலைப் புலிகள் செயல்பட்ட காலத்தைவிட மோசமாகி விட்டதாகவும், பாசிச ஆட்சி பாணி நிலவுகிறது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

நேற்று (ஜூலை 7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்,

“1988–89 ஜே.வி.பி. காலக்கட்டம் போலவே, மக்கள் நீதிமன்றங்களில், வீடுகளில், பொலிஸாரின் முன்னிலையில் கூட சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்”
என குறிப்பிட்டார்.

அத்துடன்,
“கொள்கலன் மோசடி தொடர்பில் தகவல் வெளியிட்ட டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டதும், அரசாங்கத்தின் நேரடி பங்கேற்புக்கே சாட்சி” எனக் கூறினார்.

“இந்த அரசாங்கம் கொலைகளை சாதாரணமாக்க முயற்சிக்கிறது. அவர்களைப் பற்றி ‘பாதாள உலகம், போதைப்பொருள்’ என கூறி தப்பிக்கிறது,”
என்று சாகர காரியவசம் விமர்சித்தார்.