இன்று பொலநறுவை என அழைக்கப்படும் பிரதேசம் முன்பு தமன்கடுவ என அழைக்கப்பட்டது. தம்பன்கடவை என்ற தமிழ்ப் பெயர் மருவி தமன்கடுவ என மாறியது. 1901ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்போது 1990 பேரில் 1069 பேர் தமிழர்களாகும். அதாவது இப் பிரதேசத்தில் 54 சதவீதத்தினர் தமிழர்களாயும் 25 சதவீதத்தினர் முஸ்லீம்களாயும்
3 சதவீதத்தினர் சிங்களவர்களாயும் இருந்தனர். ஏனையோர் குறிப்பாக வேடுவ சமூகத்தினர் 18 சதவீதமாக இருந்தனர்
ஆனால் 1971ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்போது மொத்த சனத்தொகையில் தமிழர்களின் பங்கு 8 சதவீதமாகவும் முஸ்லீம்களின் பங்கு 16 சதவீதமாகவும் மட்டுமே காணப்பட்டது. அதேநேரத்தில் இப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களின் பங்கு 76 சதவீதமாக இருந்தது 1901 – 1971 காலப்பகுதியில் தமிழர்களின் பங்கு 28 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைவடைய சிங்களவர்களின் பங்கு 9சதவீதத்திலிருந்து 76 சதவீதமாக அதிகரித்திருந்தது.
இது எவ்வாறு நிகழ்ந்தது? 1940களில் வரண்ட பிரதேசக் குடியேற்றத் திட்டங்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்றங்களின் விளைவே இதுவாகும்.
1940 களில் அரசாங்கம் இப் பிரதேசத்திலுள்ள பராக்கிரம சமுத்திரம்இ மின்னேரியாக் குளம்இ கிரியத்தல குளம்
என்பவற்றை மையமாகக் கொண்டு பல குடியேற்றத்திட்டங்களை மேற்கொண்டது. ஏனைய மாவட்டங்களிலிருந்து பெருமளவு சிங்கள மக்கள் இப்பிரதேசத்திற்குக்கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
1931ம் ஆண்டு 7907 பேராக இருந்த இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகைஇ 1946ம் ஆண்டு 20809 பேராக அதிகரித்தது. இதன்படி 1931 – 46 காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் சனத்தொகை 163.2 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இலங்கையின் வேறு எந்தவொரு பிரதேசத்திலும் இவ்வாறான ஒரு உயர்ந்த அதிகரிப்பு ஏற்படவில்லை என 1946ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இக் குடியேற்றத் திட்டங்களின் விளைவாக இப்பிரதேசத்திலிருந்து தமிழர்கள் முற்றாக அகற்றப்பட்டனர். இறுதியாக எடுக்கப்பட்ட 2011ம் ஆண்டுக் குடிசனமதிப்பீட்டின்படி பொலநறுவை மாவட்டத்தில் வாழும் மொத்த தமிழர்களின் தொகையே 8546 பேர் மட்டுமே. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 2 சதவீதம்.
1901ம் ஆண்டு பொலநறுவை மாவட்டத்தின் ஒரு நிர்வாகப் பிரிவு தமிழர்களுக்கே உரியதாக இருந்தது. இன்று
அம் மாவட்டத்தில் தமிழர்கள் காணமலே போய்விட்டனர்.
1940 களில் பொலநறுவை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட இத்திட்டம் பூரண வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 1950களில் கிழக்கு மாகாணத்தில் கல்லோயா, அல்லை, கந்தளாய் குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி அங்கிருந்தும் தமிழர்களை அகற்றியது.
அன்று பொலநறுவையில் நடந்த போது எங்கள் தமிழ்த்தலைமைகள் மௌனம் நேற்று கிழக்கு மாகாணத்தில்
நடந்தபோதும் மௌனம் இன்று வட மாகாணத்தில் நடைபெறுகின்றது இப்போதும் மௌனமா?
வரலாற்றிலிருந்து நாங்கள் பாடங்கள் படிக்கவில்லை என்றால் வரலாறு எங்களை மன்னிக்காது.