சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்துவிட்டு தற்போது நாட்டு மக்கள் வாழ்வதற்கே பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்து, கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய அழுத்தங்களால் நாட்டு மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சிலர் மூன்று வேளைகளும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மேலும் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாகி, அதன் கைதியாக மாறி, அவர்களின் தாளத்துக்கு ஏற்ப தனது செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களை மறந்து, பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.