மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலை, கடத்தல், காணாமல் ஆக்கல், சித்திரவதை மற்றும் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கிடையே கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், நேற்று கைது செய்யப்பட்டு, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது, மிரட்டல் வழியாக பணம் பறித்தல் மற்றும் சித்திரவதைக் கூடங்களை இயக்கியதாகவும், ஆயுதங்கள் பயன்படுத்தியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
72 மணி நேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர் தொடர்பாக, திருக்கோவில் பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
Post Views: 387