வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது.
பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகளும் தங்களை வெடிக்கச் செய்துள்ளனர். சுவரில் ஏற்பட்ட உடைப்புக்குப் பிறகு, ஐந்து முதல் ஆறு தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதலான இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-ஃபர்சான் பொறுப்பேற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post Views: 98