இன்றைய தினம் (22) கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்கள், சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படும் என்றும், அதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும், இச்செய்தி நேற்று எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதாக பிரதித் தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா தெரிவித்தார்.
மேலும், இன்று கடமைக்கு வராத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி விடுவிக்கப்பட மாட்டாது என திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (22) ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
19 கோரிக்கைகள், அதில் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைரேகை பதிவு தொடர்பான மாற்றங்கள் அடங்கும், முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
Post Views: 312