போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிஸாரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அதற்குரிய அதிகாரிகள் மற்றும் பிரிவுகளுடன் இணைந்து துரித வேலைத்திட்டமொன்று தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பரிசோதனை வழியே அடையாளம் கண்டறியும் முயற்சி
போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொலிசாரை,
- பொலிஸ் மருத்துவமனை
- மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (National Dangerous Drugs Control Board)
மூலம் பரிசோதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திணைக்கள விசாரணை – பின்னர் பணி நீக்கம்
இனம் காணப்படும் பொலிசாருக்கு எதிராக
- ஆரம்பத்தில் திணைக்கள ரீதியான விசாரணைகள்,
- ஒழுக்காற்று நடவடிக்கைகள்,
- பின்னர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநீக்கம்
எனும் கட்டமைப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பரிசோதனை
இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக,
ஒவ்வொரு பொலிஸ் நிலையம் ரீதியாக போதைப் பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Post Views: 196