திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி வழங்கியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கையில், “ஸ்டாலின் மாடல்” என்றழைக்கப்படும் தற்போதைய ஆட்சி நிதிப் பற்றாக்குறை, கடன் சுமை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் பரவல் மற்றும் திட்ட செயல்பாட்டில் தாமதம் ஆகியவைகள் மூலம் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
மழைநீர் வடிகால் திட்டங்கள் முழுமை அடையாமை, தேர்தலில் முறைகேடுகள், நிதி மேலாண்மை குறைபாடுகள், மெட்ரோ திட்டங்களில் தாமதம், மகளிர் உரிமைத் தொகை போன்ற பிரச்சனைகள் இவருடைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், கடந்த ஆட்சிக்காலத்தில் அதிமுக அரசு மேற்கொண்ட சாதனைகள் மற்றும் திட்டங்களை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, “இப்போதைய திமுக அரசு இதுபோன்ற ஒரு சாதனையைக் கூட கூற முடியுமா?” என்றார்.
இதேவேளை, போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராய மரணங்கள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஆகியவையும் தற்போதைய அரசின் செயலிழப்பு என அவர் விமர்சித்துள்ளார்.