இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகத்திலிருந்து அம்புலுவாவ மலை உச்சி வரை 1.8 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இந்த திட்டம், சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தை கம்பளை ரயில் நிலையம் வரை நீட்டிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட இந்த திட்டம் பல்வேறு தடைகள் காரணமாக தாமதமாகிவந்த நிலையில் தற்போது சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
Post Views: 163