பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்குகிறது.
உங்கள் ஸ்மார்ட்போனை அவ்வபோதோ அல்லது இரவு நேரத்திலோ சுவிட்ச் ஆப் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செல்போனை இரவிலோ அல்லது ஒருமுறையாவது சுவிட்ச் ஆப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
கதிர்வீச்சை கட்டுப்படுத்தும்
ஸ்மார்ட்போன்களை நாம் இயக்காமல் வைத்திருந்தால் கூட அதில் இருந்து கதிர்வீச்சுகள் வெளியாகிறது. கதிர்வீச்சின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. வல்லுநர்கள் கதிர்வீச்சு அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். இதை செய்வது மிக எளிது, அதாவது இரவு நேரத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டால் போதும். இப்படி செய்வது கதிர்வீச்சு வெளியாவது கட்டுப்படும்.