Thayagam Tamil Radio Australia

தேசிக்காய் கரைசல் பெயரில் யாழில் சிற்றிக் அமிலம் விற்பனை

August 22, 2025

Spread the love

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில், தேசிக்காய் கரைசல் எனக் கூறி சிற்றிக் அமிலம் கரைசலை விற்பனை செய்த நிறுவனத்திற்கு ரூ.90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன், சோதனையின்போது குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்திலிருந்து 4 லீற்றர் கொள்கலன்களில் தேசிக்காய் கரைசல் பெயரில் விற்பனை செய்யப்பட்ட சிற்றிக் அமிலம் மீட்டெடுத்தார்.

பின்னர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டதில், குறித்த கரைசல் உணவுப் பயன்பாட்டிற்கு உகந்ததல்லாத சிற்றிக் அமிலமாக இருப்பதுடன் கிருமித்தொற்றும் கொண்டிருந்தது தெரியவந்தது.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றம் நிறுவன உரிமையாளரை கடுமையாக எச்சரித்து, அவருக்கு ரூ.90,000 அபராதம் விதித்தது.

இக்கரைசலைப் பயன்படுத்தியே, இயற்கை பழச்சாறு என விற்கப்பட்ட பானங்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை கவலைக்கிடமானது.