கொழும்பு கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவியைச்சுற்றிய விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவி கல்வி கற்ற கல்லூரியின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையின் நிர்வாகம் மாணவியின் விடயத்தில் அசமந்தமாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குறித்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த பாடசாலைக்கு பதில் அதிபராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாமல் செய்வதற்கும், பாடசாலையின் நிர்வாகத்தை சீர்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Post Views: 396