Thayagam Tamil Radio Australia

புடினுடன் சந்திப்பை ரஷ்யா தடுக்கிறது – செலென்ஸ்கி குற்றச்சாட்டு

August 23, 2025

Spread the love

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்பைத் தடுக்க, ரஷ்யா தம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் செலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தலைவர்களையும் ஒன்றிணைக்க முயன்றார். எனினும் அது “எண்ணெய் மற்றும் வினிகர் போன்று இணைக்க முடியாதது” என செலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.

முன்னதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உச்சிமாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் இறுதியில் அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், ரஷ்யாவைப் போன்று யுக்ரைன் எந்தச் சந்திப்புகளையும் அஞ்சுவதில்லை எனவும் செலென்ஸ்கி வலியுறுத்தினார்.

இதேவேளை யுக்ரைனில் விஜயம் செய்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, தற்போதைய “முட்டுக்கட்டையை உடைப்பதே ட்ரம்பின் இலக்கு” என்று தெரிவித்தார்.