முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கில், மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக மேலதிக மன்றாடியர் நாயகம் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை அமர்வின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (22) குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளுக்காக அவர் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Post Views: 249