ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் இஸ்லாமிய சமூகத் தலைவர் மற்றும் அவரது மனைவி மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர்களது வாகனத்தை வழிமறித்த கும்பல், கார் மீது தாக்குதல் நடத்தி இனவெறிச் சொற்களால் அச்சுறுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தை விக்டோரியா மாநில இமாம்கள் சபை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மாநில பிரீமியர் (Premier) இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட மூவர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் யூத சமூகத்தினர் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் விரோதப் போக்கு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Post Views: 270