அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் தெரிவித்ததாவது:
- கடந்த ஜூலை 30ஆம் திகதி அமெரிக்கா கடுமையான வரி விதிப்புகளை அறிவித்தது.
- இதனைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
- இதுவரை 800 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது.
- ஆனால் இனி அந்த விலக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.
- இதன்படி, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டம் (International Emergency Economic Powers Act) அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
இந்த முடிவு, அமெரிக்காவிற்கு வணிக, வாணிப அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தி வந்த இந்திய வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
Post Views: 195