Thayagam Tamil Radio Australia

பாகிஸ்தான் இந்தியாவுடன் இருதரப்புப் போட்டியில் விளையாடாது

August 25, 2025

Spread the love

தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மோசின் நக்வி இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது 

தமது அணியுடன் இந்தியாவிடம் இனியும் இருதரப்புப் தொடரில் விளையாடுமாறு கேட்கவில்லை என அறிவித்துள்ளார் 

முன்னதாக, இந்தியா மத்திய விளையாட்டுத் துறை அமைச்சு இந்திய அணி பாகிஸ்தானுடன் எந்த இருதரப்புப் தொடரிலும் விளையாடமாட்டாது என  அறிவித்திருந்தது. அதேபோல், பாகிஸ்தான் அணிக்கு  இந்தியாவில் எந்த தொடரிலும் விளையாட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அறிவித்திருந்தது 

எனினும், ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டுத் துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலைமையில், பாகிஸ்தான் தனது அணியுடன் இருதரப்புப் போட்டியில் விளையாட இந்தியாவிடம் இனி கேட்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளது.