இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்றுவருகின்றது.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் நேரடியாக 2ஆவது சுற்றில் களமிறங்கினார்.
இதன்படி நேற்று நடைபெற்ற 2ஆவது சுற்று ஆட்டத்தில் களமிறங்கிய நோவக் ஜோகோவிச், 85ஆம் நிலை வீரரான நெதர்லாந்தின் போடிக் வான்டே ஜான்ட்ஸ்சுல்ப்பை எதிர்கொண்டார்.
குறித்த போட்டியின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜோகோவிச், 2ஆவது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் அபாரமாகச் செயற்பட்ட போடிக் வான்டே ஜான்ட்ஸ்சுல்ப் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
இந்தநிலையில் 2-6, 6-3, 1-6 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணி வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஜோகோவிச்சை வீழ்த்திய போடிக் வான்டே ஜான்ட்ஸ்சுல்ப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.