சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
Christchurchயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் Manudi Nanayakkara அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், நியூசிலாந்து அணி சார்பாக Bree Illing மற்றும் Jess Kerr ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து அணி சார்பாக, அதன் தலைவர் Suzie Bates அதிகபட்சமாக 47 ஓட்டங்களையும், Brooke Halliday ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் எடுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில் இலங்கை மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.