தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநிலத்தில் அழிவுகரமான பாசிகளின் பரவல் காரணமாக இந்த புதிய கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்வுகூறப்படுகின்றது.
இந்த கட்டுப்பாடுகள் பொழுதுபோக்கு மீன்பிடித்தலை நம்பியுள்ள வணிகங்களிடமிருந்தும் விமர்சனங்களை ஈர்த்துள்ளன.
“இது தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிறு வணிகங்களுக்கு மற்றொரு பெரிய அடியாகும்” அன்று அவர்கள் விமர்சித்துள்ளனர்
இருப்பினும், நாட்டின் மீன் வளங்களைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சர் சோய் பெட்டிசன் கூறுகிறார்.
இருப்பினும், மீன்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதால், இந்த முடிவு அவசியம் என்று மீனவர்களின் மற்றொரு குழு சுட்டிக்காட்டியுள்ளது.