Thayagam Tamil Radio Australia

தேசிய மக்கள் சக்தி அரசு இயலாமையை மறைக்க பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது – நாமல் ராஜபக்ச

July 21, 2025

Spread the love

தமது நிர்வாக இயலாமையை மூடி மறைப்பதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து சொல்லவே ஒன்றுமில்லை. மக்களின் முக்கிய பிரச்சினைகள் முழுமையாக கவனிக்கப்பட்டு தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. இதற்குப் பதிலாக பழிவாங்கும் செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன.”

“இராஜாங்க அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இது அனைத்தும் அரசு தனது இயலாமையை மறைக்கும் ஒரு முயற்சியாகும்.”

அரிசி இறக்குமதி தொடர்பிலும் விமர்சனம் மேற்கொண்ட அவர்,

“அரிசி மாபியாக்களுக்கு முடிவு கட்டுவோம் என வாக்குறுதி அளித்தே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது நாட்டிற்குள் விவசாயிகளுக்கு எதிராகவே வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது,” என்று தெரிவித்தார்.