நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல கடற்கரைகளில் காணப்பட்ட கருப்பு, ரப்பர் போன்ற பந்துகளின் உண்மையான மூலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பந்துகள் சாதாரணமாக பிளாஸ்டிக் அல்ல — அவை கொழுப்பு அமிலங்கள், பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள், மனித முடி, துணி நூல்கள் மற்றும் தண்ணீரில் பொதுவாக காணப்படும் E. coli பாக்டீரியா போன்றவற்றால் உருவாகியுள்ளன என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையை Sydney Water மற்றும் நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (EPA) இணைந்து நியமித்த சுயாதீன கழிவு நிபுணர்கள் குழு நடத்தியது.
அந்த குழு, Sydney-யில் உள்ள Malabar கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமே இந்தக் கருப்பு பந்துகளின் மூலமாக இருந்தது என்று உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை, Bondi, Coogee, Bronte, Maroubra உள்ளிட்ட மொத்தம் 17 கடற்கரைகள் அருகே இந்தப் பந்துகள் கடலில் மிதந்து காணப்பட்டன.
இந்த மர்மமான பொருள்கள் கடற்கரையை அடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்களில் அச்சம் ஏற்பட்டது. அதனால், பல கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இப்போது Sydney Water நிறுவனம், Malabar சுத்திகரிப்பு நிலையத்துக்குள் இந்தக் கழிவு பொருட்கள் எப்படிப் பிறந்தன என்பதை மேலும் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
அது 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே சமயம், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால தீர்வுகள் வகுக்கப்படும் என EPA தெரிவித்துள்ளது.
அதேபோல், கடற்கரையில் அடையாளம் தெரியாத பொருட்களைத் தொடவோ, எடுக்கவோ கூடாது என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது Sydney Water மற்றும் EPA.