யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் தாக்குதல் நடத்தி ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, ஒரு சந்தேக நபர் கங்கேசன்துறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு, குறித்த மதுபானசாலைக்குள் ஏற்பட்ட மோதலின்போது, இருவர் இணைந்து ஒருவரைக் கம்பால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஒருவரைக் கைது செய்தனர். மற்றைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.