வரவிருக்கும் தேர்தலில் எமது கட்சி வெற்றிபெற்றால் அவுஸ்திரேலிய மக்களுக்கு 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்க முடியும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு சிட்னியில் தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே குறித்த கருத்தை பிரதமர் அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர் வரும் காலங்களில் Telehealth சேவை அறிமுகப்படுத்தப்படும், அத்துடன் மாணவர் கடன் மன்னிப்பு, மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் 5% வைப்புத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு $173,168 சேமிப்பை வழங்க முடியும்” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தேர்தல் கருத்து கணிபுக்களின் படி தொழிலாளர் கட்சி முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளை 2.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.