Thayagam Tamil Radio Australia

கைதான ரணிலை சந்தித்த மஹிந்த – வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திப்பு

August 23, 2025

Spread the love

கைதாகி வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இன்று காலை சிறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க கைதாகியதிலிருந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அவரைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.