பாதுகாப்பு காரணங்களுக்காக, இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (மே 8) காலை லாகூரில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோளாகக் காட்டும் விமான நிறுவனம், கராச்சிக்கு செல்வதற்கான சேவைகள் தற்போது பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இடைநிறுத்தம் எவ்வளவு காலத்திற்கு எனும் விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Post Views: 169