Thayagam Tamil Radio Australia

“நீதி வென்றது!” – ஷின்சோ அபே கொலை வழக்கில் டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை.

January 21, 2026

Spread the love

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை 2022 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு (Tetsuya Yamagami) ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அபே சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம், உலக அளவில் பெரும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை டெட்சுயா யமகமி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த ஒருவரின் படுகொலை வழக்கில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.