அமெரிக்காவிலுள்ள விமான தயாரிப்பு நிறுவனமொன்று பறக்கும் காரை தயாரித்துள்ளது. பறக்கும் கார் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட கார் செயற்படும் விதம் தொடர்பிலான காணொளியை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jim Dukhovny காரின் வடிவமைப்பு பொறியியலாளராக உள்ளார். காரை கொள்வனவு செய்வதற்கென ஆயிரம் பேர் முன்கூட்டியே பதிவு செய்துள்ளதாகவும் அவர் பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதற்கான தயாரிப்புகளை 12 மாதங்களில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் ஆரம்ப பெறுமதி 300,000 அமெரிக்க டொலர்களாகும்.
இலத்திரனியல் பறக்கும் காராக உருவாகவுள்ள இதனை பயன்படுத்துவதற்கு முன்னர் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த தடைகளை கடக்க வேண்டியுள்ளதென பி.பி.சி தெரிவித்துள்ளது.