Thayagam Tamil Radio Australia

யாழ். மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு

August 22, 2025

Spread the love

யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் கைக்குண்டு இருப்பதை கவனித்த கடற்படையினர், அதனை உடனடியாக பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.

பின்னர் மீட்கப்பட்ட கைக்குண்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.