யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், படிப்படியாக ஒரு வணிக திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
இது தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
ஓடுபாதை விரிவாக்கம் 2026 முதல் பாதியில் முன்னுரிமை
அமைச்சர் தனது பதிலில்,
- அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னர்,
- சுமார் 130 பயணிகள் செல்லக்கூடிய விமானங்களை தரையிறக்க உதவும் வகையில்,
- விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவது அரசாங்கத்தின் திட்டமென தெரிவித்தார்.
எனினும், நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக, தற்போது பாரிய அளவிலான விரிவாக்கம் ஒன்றை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மத்தள போல அல்ல, யாழ் விமான நிலையம் வெற்றி பெறும்”
“மத்தள விமான நிலையம் போல ஒரு தோல்வி கதையாக அல்லாமல்,
யாழ்ப்பாண விமான நிலையத்தை வெற்றிகரமான வணிக மையமாக மாற்றுவோம்” என்று அமைச்சர் உறுதி தெரிவித்தார்.
அதுடன்,
- விமான நிறுவனங்களை யாழ்ப்பாணத்திற்கு ஈர்க்கும் முயற்சிகள்,
- விமான போக்குவரத்து கட்டணங்களை இன்னும் குறைக்கும் திட்டங்கள்
எல்லாவற்றையும் அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Post Views: 272