Thayagam Tamil Radio Australia

இந்திய உயர் நீதிமன்றம் தெருநாய்கள் மீட்பு உத்தரவை மாற்றியது

August 22, 2025

Spread the love

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றிய ஆகஸ்ட் 11 உத்தரவு இன்று இந்திய உயர் நீதிமன்றம் மாற்றியது.

இதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகள் முடிந்த பின், தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவதற்கான உத்தரவோடு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

3 நீதிபதிகள் கொண்ட அமர்வு (விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா) இந்த உத்தரவை அனைத்து மாநிலங்கள் மற்றும் நகராட்சி பிரதேசங்களுக்கு பொருந்தும் வகையில் விரிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

இந்த உத்தரவு ரேபிஸ் (விசர்) நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொதுவில் தெருநாய்களுக்கு உணவளிக்க அனுமதி இல்லை என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்களை உருவாக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து தெருநாய்களையும் அகற்றும் அமர்வு ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிமன்றம், கருத்தடை நடவடிக்கைகள் முடிந்த பின் தெருநாய்களை அவர்களின் பழைய வாழ்விடத்திற்கு மீண்டும் அனுப்ப கூடாது என குறிப்பிட்டிருந்தது.