இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சி மடத்தில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தை தங்காலிகமாக இடைநிறுத்த அம்மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், மார்ச் 21-ஆம் திகதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Post Views: 84