125,000 ஆண்டுகளில் இல்லாத உச்ச வெப்பம் – காலநிலை அறிக்கை எச்சரிக்கை!
பூமி கடந்த 125,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலையை அடைந்துள்ளது என்று 2025 ஆம் ஆண்டின் காலநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் பூமியின் சராசரி வருடாந்திர வெப்பநிலை, 1.5° செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இந்த அதிக வெப்பநிலைக்குக் காரணமாக, காட்டுத் தீயில் அழிவடைந்த லட்சக்கணக்கான மரங்கள், அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு,கடலின் வெப்பம் உயர்வடைந்தமை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையினை வெளியிட்ட நிபுணர் குழுவினர், பூமியின் வெப்பமயமாதலை 2° செல்சியஸ் வரை கட்டுப்படுத்த வனங்களை உருவாக்கவேண்டும் என்றும் , உணவுக் கழிவுகளைக படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், கோரிக்கை தெரிவித்துள்ளனர்
Post Views: 236