வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற ஹர்த்தாலை நிராகரித்த மக்களை பாராளுமன்றத்தில் பாராட்டியுள்ள தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, “தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாதத்தை இரண்டாவது முறையாக தோற்கடித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பணச்சூதாட்ட ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர்,
“ஹர்த்தால் தோல்வியடைந்தது. மக்கள் இனவாதத்துக்கு ஆதரவு தரவில்லை. இதற்காக அவர்களுக்கு நன்றி,” என்றார்.
மேலும், முன்னாள் எம்.பி. சுமந்திரனின் தற்போதைய நிலை கவலைக்குரியது என்றும் அவர் விமர்சனம் செய்தார்:
“ஒருகாலத்தில் நடுநிலையாக இருந்தவர். இப்போது இனவாத அரசியலில் ஈடுபடுகிறார்.”
அத்துடன், கடந்த ஆட்சியில் (மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்) அளவின்றி கடன் பெற்றதே நாட்டை வங்குரோத்துக்கு இட்டுச்சென்றதாகவும்,
“இனி பெறப்படும் ஒவ்வொரு கடனுக்கும் அரசாங்கம் பொறுப்பு எடுத்துக்கொள்கிறது,” என்றும் அவர் கூறினார்.