Thayagam Tamil Radio Australia

ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூடு : சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டார்

August 22, 2025

Spread the love

ஹம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோது உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் கைக்குண்டு வீச்சால் காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்போது சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்தில் இரண்டு சந்தேக நபர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த சந்தேக நபர் சமீபத்தில் கொஸ்கொடவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.