Thayagam Tamil Radio Australia

உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி துப்பாக்கிச் சூட்டில் பலி

August 31, 2025

Spread the love

உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (54) மேற்கு நகரமான லிவிவ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.


ஆண்ட்ரி பருபி மீது இனந்தெரியாத நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை அடையாளம் கண்டு பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்த சம்பவம் உக்ரைன் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.