Thayagam Tamil Radio Australia

முன்னாள் ஜனாதிபதிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – எம்.பி. ஞானமுத்து ஸ்ரீ நேசன்

August 25, 2025

Spread the love

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்னாள் ஜனாதிபதிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு குற்றச்சாட்டுகள் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிட்டால், ரணில் விக்கிரமசிங்க கைதானது அரசியல் பழிவாங்கலாகவே கருதப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு, போரத்தீவுபற்று பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.