முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) மீண்டும் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அவரை நாளை (01) காலை 9 மணிக்கு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாணை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட பயணத்திற்காக பொது நிதியை ரூ.1.66 மில்லியன் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் பேரில் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் திரு. சமன் ஏக்கநாயக்கவிடம் ஏற்கனவே CID விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post Views: 322