தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தனியார் ஊடகத்திற்கு வழங்கிய தகவலில், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது பெரும்பாலும் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவர் இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக பரிந்துரைத்துள்ளனர். இதன் அடிப்படையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நீதிமன்றத்தில் அவரை நேரடியாக முன்னிலைப்படுத்த முடியாத சூழ்நிலையை எடுத்துரைத்தார்.
இதற்கிடையில், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், தேவையான வசதிகளை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கும் என்றும் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.