Thayagam Tamil Radio Australia

முன்னாள் புலிகள் உறுப்பினர் ரமேஷ் கொழும்பில் டி-56 துப்பாக்கியுடன் கைது

July 21, 2025

Spread the love

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர், இன்று கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுழலும் போது, பேலியாகொடை பொலிசார் அவரை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். அந்தச் சோதனையில், அவரது வசமிருந்த டி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில், குறித்த நபர் ஒரு குற்றச் செயலுக்கு தயாராக இருந்ததாகத் தெரியவந்துள்ளது. ரமேஷிடம் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்த குழுவினர், துப்பாக்கியைக் கையளித்ததோடு, “தொடர்ந்த அறிவுறுத்தல் வரும் வரை ஹோட்டல் அறையில் தங்கியிருங்கள்” என தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், ரமேஷின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, அவரது கைது மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியாகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.