Thayagam Tamil Radio Australia

விக்டோரியா அரசின் புதிய திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள்

August 19, 2025

Spread the love

விக்டோரியன் அரசாங்கம் Gippsland கடலுக்கு அருகே காற்றாலை மின் உற்பத்தி அமைக்கும் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு $7.9 பில்லியன் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால், விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தை சேதப்படுத்தும் என்றும், விவசாய நிலங்களை பயன்படுத்த முடியாததாக மாறும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மின்சார செலவுகளை குறைக்கும் என எரிசக்தி அமைச்சர் லில்லி டி’அம்ப்ரோசியோ தெரிவித்தார். “பழைய நிலக்கரி மின் நிலையங்கள் நம்பகமற்றவை எனவும்நவீன ஆற்றல் முறைகள் மக்களின் உயிர் பாதுகாப்பிற்கே முக்கியமானவை” என்றும் அவர் கூறினார்.

அதன் கீழ் VicGrid திட்டத்தின் மூலம் வீட்டு மின்சாரம் ஆண்டுக்கு $20 வரை, சிறு வணிகங்களின் கட்டணம் $50 வரை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதன் இறுதி பரிமாற்றத் திட்டமான Victorian Transmission Plan (VTP)-ஐ வெளியிட்டு, எதிர்கால ஆற்றல் தேவைகளுக்கான பாதைகளை திட்டமிட்டுள்ளது.