முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்புக்காவலில் இருக்கும் போது ரணிலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், இலங்கை, தெற்காசியா மற்றும் உலகளாவிய தலைவர்களுடன் இணைந்து அவரை விடுவிக்க வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது ரணில் விக்ரமசிங்க இலங்கையை காப்பாற்றியவர் என அவர் பாராட்டியதோடு, அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தகுதியற்றவை என நிராகரித்தார்.
மேலும், “இவை ஐரோப்பாவில் காணப்படும் குற்றவியல் செயல்கள் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்குச் சமமாகாது” எனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்வதை விட “உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.