Thayagam Tamil Radio Australia

பெண்கள் கழிவறையில் காணொளி எடுத்த ஊழியர் கைது – பாணந்துறை நிதி நிறுவனம் பரபரப்பு

August 20, 2025

Spread the love

பாணந்துறை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில், பெண்கள் கழிவறைக்குச் செல்வதை ரகசியமாக காணொளி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், மத்துகம நவுத்துடுவைச் சேர்ந்த 26 வயதுடைய ஊழியர் என்றும், குறித்த நிதி நிறுவனத்திலேயே பணியாற்றுபவராகவும் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி,

“சந்தேகநபர் தனது கைபேசியில் பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் வீடியோக்களை பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்ச்சியாக நடந்து வந்தது.”

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.