உலகின் முதல்தர பணக்காரர் எலான் மஸ்க், கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட வரிக் குறைப்பு மற்றும் செலவுச் சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, டிரம்புடன் இருந்த நட்பை முறித்துக் கொண்டார்.
அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே, மஸ்க் பரபரப்பான அறிக்கையொன்றை வெளியிட்டு, “அமெரிக்கக் கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.
“ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல. இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது கட்சி 2026 இடைக்காலத் தேர்தலில் போட்டியிடும் என்றும் மஸ்க் அறிவித்திருந்தார்.
ஆனால் சமீப மாதங்களில் அவர் அரசியலில் மௌனமாக இருந்து, முழுமையாக வர்த்தக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுக் கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உடன் மஸ்க் சமீப வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
2028ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 2024 தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஸ்க் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.