Thayagam Tamil Radio Australia

யாழில் உறக்கமின்மை காரணமாக மூதாட்டி உயிர்மாயம்

August 23, 2025

Spread the love

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், நீண்டகாலமாக உறக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மூதாட்டி அதிகாலை வேளையில் தன்னைத்தானே தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணையாளர் நமசிவாயம் பிரேம்குமார் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.