Thayagam Tamil Radio Australia

ஆஸ்திரேலியாவில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இ-சிகரெட் பாதுகாப்பு குறித்த கல்வித் திட்டம்

September 25, 2025

Spread the love

ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சக மாணவர்களின் அழுத்தம் மற்றும் வணிக விளம்பர அழுத்தங்களை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘Our Futures’ எனப்படும் இந்தத் திட்டம், 10 முதல் 12 வயதுடைய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக Vaping (இ-சிகரெட்) பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் கட்டமாக நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் பேட்டர்சன் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, Vaping பயன்படுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 65% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புதிய திட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்கள், வயதுக்கேற்ற நேரடி நிகழ்ச்சிகள், உரையாடல்கள், சந்தைப்படுத்தல் தாக்கங்கள் குறித்த ஆய்வுகள், அவற்றை எதிர்கொள்ளும் பயிற்சிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் Vaping தொடர்பான சரியான அறிவும் திறன்களும் வழங்கப்படும்.

திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்ய முன்–பின் சோதனைகள் நடத்தப்படவுள்ளன. இது வெற்றிகரமாக அமையுமானால், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.