Thayagam Tamil Radio Australia

மெக்சிக்கோவில் காணாமல் ஆக்கப்பட்டோர்: மக்கள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

August 31, 2025

Spread the love

மெக்சிக்கோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியதற்காக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கானோர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், மெக்சிக்கோ நகரம் உட்பட பல முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

மெக்சிக்கோவின் ஜனாதிபதி கிளோடியா ஷின்பாமி, நேரடியாக தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களை கண்டுபிடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து 1,30,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னரே காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதும், போதைப் பொருள் கும்பல்கள் வலுக்கட்டாயமாகக் கடத்தல், உற்பத்தி மற்றும் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்துவதாகவும், எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டுவருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.